வவுனியா ஆச்சிபுரம் புனித அந்தோனியார் முன்பள்ளியில் இன்றையதினம் நடைபெற்ற ஒளி விழா நிகழ்வின்போது தோழர் ஆச்சி(சிவபாலன்) அவர்களின் நினைவாக மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் பரிசுப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன. கனடாவில் வசிக்கும் தோழர் ஆச்சி அவர்களின் சகோதரர் சிவநாதன் அவர்கள் இந்நிகழ்வுக்கான நிதிப் பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

நிகழ்வில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தோழர்கள் கண்ணதாசன், சுரேஸ், யுரேனஸ் இளைஞர் கழக இயக்குநர் சிம்சுபன், திருமதி தயாபரன், அருட்சகோதரி ஆகியோரும், ஊர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.