மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைதான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டி காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்ட அவர் இன்றைய தினம் கொழும்பு நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். Read more
நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனல்ட் லூ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை இன்று சந்தித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியலமைப்பு சபைக்கு இரண்டு உறுப்பினர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி எதிர்க்கட்சி தலைவரைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் பி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் சிறுபான்மை கட்சிகளின் சார்பில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், அரசியலமைப்பு சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறுபான்மை கட்சிகளின் சார்பில் ஒரு உறுப்பினரைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோருக்கு இடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஜனநாயக ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும்இ மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தைத் தொடர்ந்தும் ஊக்குவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவிச் செயலாளர் டொனால்ட் லு தலைமையிலான தூதுக்குழுவினருக்கும்இ இலங்கையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மியன்மாரில் உள்ள இணையவழி மோசடி முகாமில் மேலும் 14 இலங்கையர்கள் உள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதியில் சிக்கியிருந்த பலர் ஏலவே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.