Header image alt text

தோழர் கிட்டு (இராமசாமி கிருஷ்ணபிள்ளை) அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்று….. மலர்வு 1960.03.22   –  உதிர்வு 2020.12.08
வவுனியா பாவற்குளம் 4ம் யூனிட்டை பிறப்பிடமாகவும் எல்லப்பர் மருதன்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட தோழர் கிட்டு அவர்கள் ஆரம்ப காலங்களில் கழகத்தின் பாவற்குளம் பிரதேச பொறுப்பாளராக செயற்பட்டு வந்ததோடு, பின்னர் கட்சி உறுப்பினராக கட்சிப் பணிகளில் மரணிக்கும் வரை மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தார்.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள கிளர்ச்சியாளர்கள், சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மக்களின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதையடுத்து, அந்த நாட்டு ஜனாதிபதி விமானத்தினூடாக வெளிநாடு ஒன்றுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read more

ஆவா குழுவின் தலைவர் என சந்தேகிக்கப்பட்டு கனடாவில் கைது செய்யப்பட்டுள்ள பிரசன்ன நல்லலிங்கத்தை பிரான்சுக்கு நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் கனடாவின் அறிவுறுத்தலுக்கமைய அவருக்கு எதிராக சர்வதேச காவல்துறை பிடியாணை பிறப்பித்திருந்தது. அவர் 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக பிரான்சுக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளது. அதன்படி, இந்த விடயம் தொடர்பில், சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றினூடாக எதிர்காலத்தில் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட பின்னணி மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கான தகவல்களை அறிந்து கொள்வது இதன் முக்கிய நோக்கமாகும். Read more

அனர்த்த நிலைமை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலவும் குறைத்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை மறுதினம்(10) முதல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. Read more

நாட்டின் பல பகுதிகளில் அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். அத்துடன், சதொச ஊடாக அரிசியை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், அங்கு அரிசி மற்றும் தேங்காய் என்பன கையிருப்பில் இல்லை எனவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதேநேரம், தங்களது மாதாந்த நுகர்வு பொருட்களுக்கான செலவில் தற்போது அதிகளவாகப் பங்கினை அரிசிக்காகச் செலவிட வேண்டியுள்ளதாகவும் நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளார். Read more

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா (07.12.2024) முன்பள்ளி ஆசிரியரின் தலைமையில் நடைபெற்றது. விளையாட்டு நிகழ்வில் கௌரவ விருந்தினராக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் தொழிற்சங்கப் பொறுப்பாளர் சு.காண்டீபன், தோழர் கண்ணதாசன் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Read more