வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா (07.12.2024) முன்பள்ளி ஆசிரியரின் தலைமையில் நடைபெற்றது. விளையாட்டு நிகழ்வில் கௌரவ விருந்தினராக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் தொழிற்சங்கப் பொறுப்பாளர் சு.காண்டீபன், தோழர் கண்ணதாசன் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.