முல்லைத்தீவு நகரில் மீனவர்களினால் இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், தாம் எதிர்கொண்டுவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமெனப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.