Header image alt text

11.12.1985ல் அரியாலையில் சுட்டுக் கொல்லப்பட்ட அமரர் தோழர் ரவிமூர்த்தி – கொக்குவில்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…..
இவருடன் தோழர் பண்டாவும் கொல்லப்பட்டார்.
11/12/1984ல் சுழிபுரம் பறாளாயில் இராணுவத்துடனான மோதலில் வீரமரணமடைந்த அமரர் தோழர் ரங்கா (சரவணமுத்து ஜெயமனோகரன்- மாதகல்) அவர்களின 40 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…

நீண்ட தூர சேவையில் ஈடுபடும் ரயில்களில் முன்பதிவு செய்து பயணச்சீட்டை கொள்வனவு செய்வதிலும் மோசடி இடம்பெற்றுள்ளது. இது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

அதானி நிறுவனம் இலங்கையில் நிர்மாணிக்கவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் அமைச்சரவையில் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையிலே அமைச்சரவையில் விடயங்கள் முன்வைக்கப்படவுள்ளன. இந்த குழு பல்வேறு துறைகள் ஊடாக ஆய்வுகளை மேற்கொண்டு காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பான பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. Read more