சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக அசோக சப்புமல் ரன்வல இன்று(13) அறிக்கை மூலம் அறிவித்தார். தனது கல்வித் தகைமை குறித்து சமூகத்தில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தாம் ஒரு போதும் தமது கல்வித் தகைமைகள் தொடர்பாக தவறான தகவல்களை வழங்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் அவர்  தெரிவித்துள்ளார்.  தமக்கு ஜப்பான் வசீதா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய ஆய்வு நிறுவனமொன்று கலாநிதி பட்டம் வழங்கியதாகவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது கலாநிதி பட்டம் சார்ந்த ஆதாரங்களை உடனடியாக சமர்ப்பிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து அதனை பெற்றுக்கொள்ள  காலஅவகாசம் தேவைப்படுவதாகவும் அசோக ரன்வல் கூறியுள்ளார்.

இதனால் தமது அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு அபகீர்த்தி ஏற்படக்கூடாது என்பதை கருத்திற்கொண்டு தாம் இந்தத் தீர்மானத்தை  எடுத்ததாக அசோக சப்புலமல் ரன்வல அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.