14.12.1988இல் வவுனியாமருதங்குளத்தில் மரணித்த தோழர்கள் ஆச்சி (ஆறுமுகம்Posted by plotenewseditor on 14 December 2024
Posted in செய்திகள்
14.12.1988இல் வவுனியாமருதங்குளத்தில் மரணித்த தோழர்கள் ஆச்சி (ஆறுமுகம்Posted by plotenewseditor on 14 December 2024
Posted in செய்திகள்
அமரர் இராஜேஸ்வரி இராஜசேகரம் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு ஒருதொகுதி மக்களுக்கான உலருணவுப்பொதிகள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஊடாக வழங்கிவைக்கப்பட்டது. தோழர் முகுந்தன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும், கரைதுறைபற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கனகையா தவராசா அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.Posted by plotenewseditor on 14 December 2024
Posted in செய்திகள்
வவுனியா சமளம்குளம் பாடசாலையில் தோழர் ஆச்சி (ஆறுமுகம் சிவபாலன்) அவர்களின் நினைவாக தோழர் சிம்சுபன் மற்றும் மைதிலி அவர்களின் ஒழுங்கமைப்பில் மாணவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (14.12.2024 ) நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மாணவர்களுக்கான புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டன.Posted by plotenewseditor on 14 December 2024
Posted in செய்திகள்
இந்தியாவிடமிருந்து நன்கொடையாக கிடைக்கவுள்ள எஞ்சின்களை தூர ரயில் சேவைகளுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் எஞ்சின்களை பொருட்கள் கொண்டு செல்லும் ரயில்களுக்கும் பயன்படுத்த முடியுமென இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது திணைக்களத்திடமுள்ள அதிக எடைகொண்ட மற்றும் தூரப் பிரதேசங்களுக்கான ரயில்களில் குறைபாடுகள் உள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 14 December 2024
Posted in செய்திகள்
சம்பூரில் இந்திய நிதி உதவியுடன் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை விரைவாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் திறன் 120 மெகாவோட் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். இந்திய எரிசக்தி அதிகார சபை மற்றும் மின்சார சபையின் ஒன்றிணைந்த வேலைத்திட்டமாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 14 December 2024
Posted in செய்திகள்
சபாநாயகர் பதவியை அசோக ரன்வல இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்யவுள்ளதாக பாராளுமன்றம் அறிவித்துள்ளது. தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பதவிப்பிரமாணத்தின் பின்னர் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். Read more