வவுனியா சமளம்குளம் பாடசாலையில் தோழர் ஆச்சி (ஆறுமுகம் சிவபாலன்) அவர்களின் நினைவாக தோழர் சிம்சுபன் மற்றும் மைதிலி அவர்களின் ஒழுங்கமைப்பில் மாணவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (14.12.2024 ) நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மாணவர்களுக்கான புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், யுரேனஸ் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள், கழக தோழர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வுக்கான நிதிப் பங்களிப்பினை தோழர் ஆச்சி அவர்களின் சகோதரர் திரு. சிவநாதன் (கனடா) அவர்கள் வழங்கியிருந்தார்.
