நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தனது கல்வித் தகைமை தொடர்பில் பிழையான தரவுகள் நாடாளுமன்றத் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார். தான் கடந்த 25 வருடங்களாக சட்டத்தரணியாக இருப்பதாகவும் தமது பெயருக்கு முன்பாக ஒரு போதும் கலாநிதி பட்டத்தை பயன்படுத்தியது இல்லை என்றும் ஹர்ஷன நாணயக்கார கூறினார். Read more
இந்தியாவிற்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இந்தியாவின் ராஷ்ட்ரபதி பவனில் இன்று(16) முற்பகல் நடைபெற்றது. இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையில் இந்த வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
வேலை ஒப்பந்தத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இஸ்ரேலில் பணியாற்றும் 17 இலங்கையர்களை அந்த நாட்டிலிருந்து நாடு கடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். விவசாயத் துறையில் பணிபுரிவதற்கான விசாவில் இஸ்ரேலுக்கு சென்றுள்ள அவர்கள், வெதுப்பகம் ஒன்றில் பணிபுரியும் போது இஸ்ரேல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.