Header image alt text

கடந்த கார்த்திகை மாதம் 24,25,26,27 ம் திகதிகளில் ஏற்பட்டிருந்த வெள்ள அனர்த்தம் காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் கிராமப் பிரிவில் பாதிக்கப்பட்டிருந்த ஐம்பது (50) குடும்பங்களுக்கு கடந்த 04ம் திகதி உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் சமூக மேம்பாட்டுக் கழகத்தினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தன. இரண்டாயிரம் ரூபா பெறுமதியான ஐம்பது பொதிகளுக்குமான ஒரு இலட்சம் ரூபா நிதியை ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த திரு. வசந்தகுமார் சதீஸ், திரு. தெய்வவேல்பரமநாதன் தரணீபன், திரு. சிவச்சந்திரன் சிவஞானம் ஆகியோரும் நோர்வேயைச் சேர்ந்த திரு. பிரதீபன் அவர்களும் வழங்கியிருந்தனர்.

Read more

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றிரவு(16) இடம்பெற்றது. ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருநாடுகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதனிடையே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க​ புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். Read more

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நேற்று(16) பிணை வழங்கப்பட்டது. தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நிபந்தனை பிணையில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் அவருடன் சென்றிருந்த சட்டத்தரணி N.கௌஷல்யா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். Read more

புதிய சபாநாயகராக டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். அசோக ரன்வல பதவி விலகியமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்காக புதிய சபாநாயகராக டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்னவின் பெயரை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய முன்மொழிய, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார்.

தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் இன்று(17) சத்தியப்பிரமாணம் செய்தனர்.  பிரதி சபாநாயகர் டொக்டர் மொஹமட் ரிஸ்வி முன்னிலையில் இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிய ஜனநாயக முன்னணின் பாராளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக மனோ கணேசன், சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, முத்து மொஹம்மட் ஆகியோர் இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.