கடந்த கார்த்திகை மாதம் 24,25,26,27 ம் திகதிகளில் ஏற்பட்டிருந்த வெள்ள அனர்த்தம் காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் கிராமப் பிரிவில் பாதிக்கப்பட்டிருந்த ஐம்பது (50) குடும்பங்களுக்கு கடந்த 04ம் திகதி உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் சமூக மேம்பாட்டுக் கழகத்தினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தன. இரண்டாயிரம் ரூபா பெறுமதியான ஐம்பது பொதிகளுக்குமான ஒரு இலட்சம் ரூபா நிதியை ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த திரு. வசந்தகுமார் சதீஸ், திரு. தெய்வவேல்பரமநாதன் தரணீபன், திரு. சிவச்சந்திரன் சிவஞானம் ஆகியோரும் நோர்வேயைச் சேர்ந்த திரு. பிரதீபன் அவர்களும் வழங்கியிருந்தனர்.

மேற்படி செயற்பாடுகளை சமூக மேம்பாட்டுக் கழகத்தின் பணிப்பாளர் திரு. த. கதிர்காமநாதன்(காந்தன்) அவர்களும் கிளிநொச்சியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் திரு. அ. யோகேஸ்வரன் அவர்களும் ஒருங்கிணைத்திருந்தனர்.