யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் த.சத்தியமூர்த்தியால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாம் தடுப்புக்காவலில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் அவதூறான விடயங்கள் பரப்பப்பட்டமை, Read more
அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் அடங்குகின்றனர்.
2028ஆம் ஆண்டில் நாட்டின் அந்நிய செலாவணியை 15.1 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்துகையிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். பொதுத் தேர்தலின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் மூன்றாவது மீளாய்வை ஆரம்பித்ததாகவும் அதில் இரண்டாம் மீளாய்வில் இணங்கிய விடயங்களில் பல திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.