அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் அடங்குகின்றனர்.