Header image alt text

19.12.1990இல் மரணித்த தோழர் சந்திரன் (க.விவேகராசா) அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்ட அஜான் ஹார்திய புஞ்சிஹேவா ஆகியோரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று(19) பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார். 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி சம்பவம் தொடர்பில் தொடரப்பட்டிருந்த வழக்கிற்கு இணையாகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று(19) பிடியாணை பிறப்பித்தார். தமது சேவைபெறுநர் சுகவீனம் காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். Read more

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டுப் பயணிகளுடன் பயணித்த கப்பல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. மியன்மாரிலிருந்து 103 பயணிகளுடன் பயணித்த கப்பல் ஒன்றே கரையொதுங்கியுள்ளது. அவர்களில் 25க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடங்குகின்றனர். அவர்களைக் கரைக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய(19) ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.