Header image alt text

தோழர் நெல்சன் (அமரர் முருகேசு நெல்சன்) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுகள்…..
மலர்வு :1981.09.06
உதிர்வு : 1999.12.20

முல்லைத்தீவில் 103 மியன்மார் ஏதிலிகளுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த படகின் மாலுமிகள் (12) டிசெம்பர் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏதிலிகள் மிரிஹானை தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மியன்மார் ஏதிலிகளுடன் பயணித்த மீன்பிடி படகொன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பகுதியை நேற்று வந்தடைந்தது. Read more

“Clean SriLanka” வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டு இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. 16 உறுப்பினர்களைக் கொண்ட இந்த செயலணியில் ஜனாதிபதி செயலாளர் என்.எஸ்.குமாநாயக்க, இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி, பதில் பொலிஸ் மாஅதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், கலாநிதி அனுருத்த கமகே, கலாநிதி காமினி படுவிடகே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Read more

எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரரை இன்று பிற்பகல் தரிசனம் செய்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நெவில் சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் இன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்படி, அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். Read more

நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர், இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, அவரை சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. பத்தரமுல்ல சுஹுருபாயவில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவும் இணைந்து கொண்டார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. Read more