ஹட்டன், மல்லியப்பூ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதி எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிகிச்சை பெறும் வைத்தியசாலைக்கு சென்ற பதில் நீதவான், வைத்தியர்களிடம் அவரது நிலைமை தொடர்பில் விடயங்களைக் கேட்டறிந்த பின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். நாவலப்பிட்டியைச் சேர்ந்த 46 வயதான சாரதியே இந்த விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். Read more
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டகாஃபுமி கடோனோவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகப் பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படுவதை உறுதிசெய்ய பாடசாலைக் கட்டமைப்பு, அதிபர், ஆசிரியர் பயிற்சி மற்றும் மதிப்பீட்டு பொறிமுறைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்துவம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கும் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசியக் குழுவின் துணைத் தலைவி குயின் போயோங் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற ஒத்துழைப்பு, நிலைபேறான அபிவிருத்தி, வர்த்தகம், விவசாயம், தொழில்கள் மற்றும் பலதரப்பு ஈடுபாடுகள் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொன்னாலை வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரி வல்வெட்டித்துறையில் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திப் பெருமளவான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்த வீதி புனரமைக்கப்படாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.