பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் படி பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம், இந்தியாவை ராஜதந்திர ரீதியாக கோரியுள்ளது. 16 ஆண்டு காலமாக ஆட்சி செலுத்திய அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் இந்தியாவில் வசித்து வருகிறார். Read more
பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய பசுபிக் குழுவின் மூலம் நடத்தப்பட இருக்கும் இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்கான முக்கிய தயார்படுத்தல் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு சட்டரீதியான தடை நிலவுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முப்படை வீரர்களை இன்று முதல் அமுலாகும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் முப்படைத் தளபதிகளுக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் – தென்மராட்சி – கரம்பகம் பகுதியிலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் குறித்த பகுதியில் தொடர்ந்தும் சட்டவிரோதமான முறையில் மணல் அகழப்பட்டு வரும் நிலையில் உரிய நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.