Header image alt text

புதிய அரசியலமைப்பை வகுக்கும்போது, சுகாதார சேவையைப் பெறுவதற்கான உரிமையை மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகப் பிரகடனப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். Read more

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 17 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதான 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு, முதற்கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். Read more

11 கைதிகளுக்கு மரணத்தை ஏற்படுத்திய மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சட்டமா அதிபரால் அனுப்பப்பட்ட கடிதத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் உயிரிழந்த கைதி ஒருவரின் மனைவி, இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். Read more

ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசேட விசாரணையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபானசாலைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி பேருந்து சாலை சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜர் ஒன்றும் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனிடம் கையளிக்கப்பட்டது.