11 கைதிகளுக்கு மரணத்தை ஏற்படுத்திய மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சட்டமா அதிபரால் அனுப்பப்பட்ட கடிதத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் உயிரிழந்த கைதி ஒருவரின் மனைவி, இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வெலிசர நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், அதன்பின்னர் குறித்த சம்பவம் தொடர்பான நடவடிக்கைகளை முடிவுறுத்தி, கோப்புகளை மூடுமாறு அறிவுறுத்தி சட்டமா அதிபரினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குக் கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சட்டமா அதிபரின் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது எனக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், சட்டமா அதிபரின் கடிதத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.