எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களுக்குப் பயன்படுத்தத் தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வர்த்தமானி அறிவித்தல் குற்றவியல் சட்டம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் வெளியிடப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more
இலங்கையில் உள்ள இந்தியன் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்துள்ளது. 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை நிதிப் பரிவர்த்தனை அறிக்கைச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்காதமை தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் இந்தியன் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கியின் நிதி உளவறிதல் பிரிவு அபராதம் விதித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட இலங்கை மின்சார சபையின் 62 பணியாளர்களும் மீண்டும் கடமையில் இணைக்கப்பட்டுள்ளனர். வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் விசேட பணிப்புரைக்கமைய அவர்கள் மீண்டும் கடமையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.