சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0 ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இந்தப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது.
26.12.2005இல் இறம்பைக்குளத்தில் மரணித்த தோழர் சர்ச்சில் (திருப்பதி மாஸ்டர்- வீரப்பன் திருப்பதி- சமயபுரம்) அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
சுனாமி உள்ளிட்ட நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் நோக்கில் “தேசிய பாதுகாப்பு தினம்” இன்று(26) அனுஷ்டிக்கப்படுகின்றது. சுனாமி பேரழிவிற்கு பின்னர் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் திகதி தேசிய நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 2012ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு தினமாக அரசாங்கம் அறிவித்தது.