மலர்வு : 1940.04.14
உதிர்வு : 2024.12.26
யாழ். நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், இல: 89, விசுவமடு மேற்கு, விசுவமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பிஐயா மகேஸ்வரி அவர்கள் நேற்று (26.12.2024) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகிறோம்.

இவர் எமது கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட மகளிர் பிரிவு பொறுப்பாளரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான திருமதி நந்தகுமார் கேதினி அவர்களின் அன்புத் தாயார் ஆவார்.
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி DPLF)
27.12.2024
குறிப்பு : இறுதி நிகழ்வு ஞாயிறு (29.12.2024) காலை 10.00 மணியளவில் நடைபெறும்