Header image alt text

28.12.1991இல் பெரியபோரதீவில் மரணித்த தோழர் செல்வம் (சவரியான் குரூஸ் – தாழ்வுபாடு) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

அரச அதிகாரிகளுக்கு அடுத்த ஆண்டுக்காக 4000 ரூபாயிற்கு மிகாத விசேட முற்பணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்கால வேதனத்தில் கழிக்கப்படும் வகையில் இந்த முற்பணத் தொகை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, இந்த முற்பணம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்குள் செலுத்தப்பட உள்ளது. Read more

பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெயை சுத்திகரித்து மீண்டும் சந்தைக்கு விநியோகிக்கும் மோசடி தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மிளகாய், மஞ்சள், மசாலா வகைகளுடன் பல்வேறு வகையான மா கலக்கப்படுவது தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாக சங்கத்தின் பிரதம செயலாளர் சமீர முத்துகுட தெரிவித்தார். Read more

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட 6 பேர் அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 90 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டனர். Read more

வடமாகாணத்தில் பரீட்சை உள்ளிட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர்களிடம் இருந்து பணம் அறவிடும் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாகாண ஆளுநரிடம் முன்வைத்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்தை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். Read more