கனடா oshawaவில் வசிக்கும் தோழர் விஜயன் அவர்களின் பேரனும், பிரதீபராஜ் ஜிந்துயா தம்பதிகளின் செல்வப் புதல்வனுமாகிய உருத்திரா தேவா (இரத்தினா, செந்தில்) அவர்களின் நான்காவது (30.12.2020.) பிறந்தநாளை முன்னிட்டு புத்தகைப்பைகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 30.12.2024) திருகோணமலை பாலையூற்று முருகன்கோவிலடியில் சக்தி மாதர் சங்கத்தின் தலைவி திருமதி வசந்தினி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஊடகவியலாளர் ஜதீந்திரா, எமது கட்சித் தோழர்கள் பகீரதன், தேவன் மற்றும் சக்தி மாதர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து மல்லிகைத்தீவில் அமைந்துள்ள பெண்கள் இல்லத்திற்கு அத்தியாவசியப் பொருட்களும், மதியம் மற்றும் இரவு உணவும் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.