கனடா ழுளாயறயவில் வசிக்கும் பிரதீபராஜ் ஜிந்துயா தம்பதிகளின் செல்வப் புதல்வன் உருத்திரா தேவா (இரத்தினா, செந்தில்) அவர்களின் நான்காவது (30.12.2020.) பிறந்தநாளை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 30.12.2024) வற்றாப்பளையில் இடம்பெற்றது. இதன்போது சூரி முன்பள்ளி, இளங்கதிர் முன்பள்ளி, நிரஞ்சன் முன்பள்ளி, செங்கதிர் முன்பள்ளி ஆகிய நான்கு முன்பள்ளிகளைச் சேர்ந்த 80 சிறார்களுக்கு கற்றல் உபகரணங்களும், கேக், சிற்றுண்டி தேநீர் என்பனவும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் எமது கட்சியின் பொருளாளர் க.சிவநேசன் (பவன்), கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் ஜூட்சன்,
வற்றாப்பளை பிரதேச இணைப்பாளர் புஸ்பராஜா, முள்ளியவளை மேற்கு வட்டார இணைப்பாளர் சஞ்சி, மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் பிரசாத்,
மகளிர் குழுக்களின் தலைவி கொனிற்றா, குட்டி, மகளிர் குழுக்களின் பொருளாளர் அஜிதா மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
