Header image alt text

10.12.2022ல் மரணித்த தோழர் ஆண்டவர் (ஐயாக்கண்டு பொன்னையா) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள்…

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில், இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கிளிநொச்சி, வவுனியா மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. Read more

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். இதன்படி, ஜனாதிபதி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி இந்திய பிரதமர் மற்றும் அரச உயர்மட்ட தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

முல்லைத்தீவு நகரில் மீனவர்களினால் இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், தாம் எதிர்கொண்டுவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமெனப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாரியளவிலான ஊழல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையர்கள் இருவருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கே இந்த பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. Read more

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. Read more

இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 23,958 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த காலப்பகுதியில் ரஸ்யாவில் இருந்து 4,418 பேரும், இந்தியாவிலிருந்து 4,317 பேரும், பிரித்தானியாவில் இருந்து 1,592 பேரும் நாட்டுக்குச் சுற்றுலாப் பயணிகளாக வருகைதந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இரத்து செய்ததால் 72 கோடி ரூபாவிற்கும் அதிக அரச பணம் வீண் விரயமாகியுள்ளதாக சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். Read more

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளமையினால் குறித்த பகுதியில் கடற்றொழில் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது. இதன்படி, குறித்த கடற்பகுதிகளில் காற்றானது 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரிசி வர்த்தகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சந்தையில் அதிகரித்துள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விஷேட சந்திப்பில் அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். Read more