முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நிதி மோசடி தொடர்பில் மனுஷ நாணயக்காரவின் சகோதரரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் இன்றைய தினம் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். Read more
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ளார். தனிப்பட்ட விஜயமாக அவர் காத்மண்டு ட்ரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக நேபாள வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பிலான தகவல் அடங்கிய ஆவணத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறை நிலையங்களுக்கு அனுப்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்பின்னர், காவல்துறையினரால் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
28.12.1991இல் பெரியபோரதீவில் மரணித்த தோழர் செல்வம் (சவரியான் குரூஸ் – தாழ்வுபாடு) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
அரச அதிகாரிகளுக்கு அடுத்த ஆண்டுக்காக 4000 ரூபாயிற்கு மிகாத விசேட முற்பணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்கால வேதனத்தில் கழிக்கப்படும் வகையில் இந்த முற்பணத் தொகை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, இந்த முற்பணம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்குள் செலுத்தப்பட உள்ளது.
பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெயை சுத்திகரித்து மீண்டும் சந்தைக்கு விநியோகிக்கும் மோசடி தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மிளகாய், மஞ்சள், மசாலா வகைகளுடன் பல்வேறு வகையான மா கலக்கப்படுவது தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாக சங்கத்தின் பிரதம செயலாளர் சமீர முத்துகுட தெரிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட 6 பேர் அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 90 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.
வடமாகாணத்தில் பரீட்சை உள்ளிட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர்களிடம் இருந்து பணம் அறவிடும் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாகாண ஆளுநரிடம் முன்வைத்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்தை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
விமானத்தில் பயணித்த இலங்கை பெண்ணொருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தமையை அடுத்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று ஈராக்கின் குர்திஸ் பிராந்தியத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறித்த பெண் நேற்று விமானத்தில் உயிரிழந்ததாக அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
27.12.2006இல் மரணித்த கழகத்தின் மட்டக்களப்பு – அம்பாறை பிராந்திய முன்னாள் பொறுப்பாளர் தோழர் மாமா (கணபதிப்பிள்ளை பாக்கியராஜ்- களுதாவளை), தோழர் கரிகாலன் (இராஜரட்ணம் ராஜேந்திரன் – தம்பட்டை) ஆகியோரின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…