Header image alt text

11 கைதிகளுக்கு மரணத்தை ஏற்படுத்திய மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சட்டமா அதிபரால் அனுப்பப்பட்ட கடிதத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் உயிரிழந்த கைதி ஒருவரின் மனைவி, இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். Read more

ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசேட விசாரணையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபானசாலைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி பேருந்து சாலை சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜர் ஒன்றும் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனிடம் கையளிக்கப்பட்டது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் படி பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம், இந்தியாவை ராஜதந்திர ரீதியாக கோரியுள்ளது. 16 ஆண்டு காலமாக ஆட்சி செலுத்திய அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் இந்தியாவில் வசித்து வருகிறார். Read more

பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய பசுபிக் குழுவின் மூலம் நடத்தப்பட இருக்கும் இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்கான முக்கிய தயார்படுத்தல் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு சட்டரீதியான தடை நிலவுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். Read more

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முப்படை வீரர்களை இன்று முதல் அமுலாகும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் முப்படைத் தளபதிகளுக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – கரம்பகம் பகுதியிலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் குறித்த பகுதியில் தொடர்ந்தும் சட்டவிரோதமான முறையில் மணல் அகழப்பட்டு வரும் நிலையில் உரிய நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஹட்டன், மல்லியப்பூ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதி எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிகிச்சை பெறும் வைத்தியசாலைக்கு சென்ற பதில் நீதவான், வைத்தியர்களிடம் அவரது நிலைமை தொடர்பில் விடயங்களைக் கேட்டறிந்த பின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். நாவலப்பிட்டியைச் சேர்ந்த 46 வயதான சாரதியே இந்த விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். Read more

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டகாஃபுமி கடோனோவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகப் பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படுவதை உறுதிசெய்ய பாடசாலைக் கட்டமைப்பு, அதிபர், ஆசிரியர் பயிற்சி மற்றும் மதிப்பீட்டு பொறிமுறைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்துவம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.