Header image alt text

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கும் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசியக் குழுவின் துணைத் தலைவி குயின் போயோங் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற ஒத்துழைப்பு, நிலைபேறான அபிவிருத்தி, வர்த்தகம், விவசாயம், தொழில்கள் மற்றும் பலதரப்பு ஈடுபாடுகள் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. Read more

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொன்னாலை வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரி வல்வெட்டித்துறையில் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திப் பெருமளவான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்த வீதி புனரமைக்கப்படாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் இன்றைய தினம் மன்னாருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் விசேட சந்திப்பு இடம்பெற்றது. அத்துடன் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more

13ஆம் திருத்த சட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்தியா செயற்பட்டு வருகின்ற போதிலும் இலங்கையின் புதிய அரசாங்கம் அதில் கரிசனை காட்டவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் சமஷ்டியைக் கைவிட்டுக் கூட்டு சமஷ்டியை அனைவரும் வலியுறுத்த வேண்டும் எனவும்  சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் மியோன் லீ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் நல்லுறவைப் பேணிவருகின்றமைக்கு அந்த நாட்டின் தூதுவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்ததாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more

வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று சந்தித்துள்ளார். பிரதமரின் அலுவலகத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, தலைமன்னார் பகுதியில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் கையகப்படுத்தியுள்ள காணிகள் பொதுமக்களின் பாவனைக்காக மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என அவர் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். Read more

அடுத்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ள நிலையில், நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் வேகமாகக் குறையும் என ஜப்பான், இலங்கை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க, குறைந்த இயந்திர திறன் கொண்ட வாகனங்களே நாட்டுக்கு மிகவும் பொருத்தமானது. Read more

தோழர் நெல்சன் (அமரர் முருகேசு நெல்சன்) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுகள்…..
மலர்வு :1981.09.06
உதிர்வு : 1999.12.20

முல்லைத்தீவில் 103 மியன்மார் ஏதிலிகளுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த படகின் மாலுமிகள் (12) டிசெம்பர் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏதிலிகள் மிரிஹானை தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மியன்மார் ஏதிலிகளுடன் பயணித்த மீன்பிடி படகொன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பகுதியை நேற்று வந்தடைந்தது. Read more

“Clean SriLanka” வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டு இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. 16 உறுப்பினர்களைக் கொண்ட இந்த செயலணியில் ஜனாதிபதி செயலாளர் என்.எஸ்.குமாநாயக்க, இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி, பதில் பொலிஸ் மாஅதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், கலாநிதி அனுருத்த கமகே, கலாநிதி காமினி படுவிடகே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Read more