எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரரை இன்று பிற்பகல் தரிசனம் செய்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய(19) ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
		    
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நெவில் சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் இன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்படி, அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 
நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர், இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, அவரை சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. பத்தரமுல்ல சுஹுருபாயவில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவும் இணைந்து கொண்டார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. 
19.12.1990இல் மரணித்த தோழர் சந்திரன் (க.விவேகராசா) அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்ட அஜான் ஹார்திய புஞ்சிஹேவா ஆகியோரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று(19) பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார். 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி சம்பவம் தொடர்பில் தொடரப்பட்டிருந்த வழக்கிற்கு இணையாகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று(19) பிடியாணை பிறப்பித்தார். தமது சேவைபெறுநர் சுகவீனம் காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். 
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டுப் பயணிகளுடன் பயணித்த கப்பல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. மியன்மாரிலிருந்து 103 பயணிகளுடன் பயணித்த கப்பல் ஒன்றே கரையொதுங்கியுள்ளது. அவர்களில் 25க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடங்குகின்றனர். அவர்களைக் கரைக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் த.சத்தியமூர்த்தியால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாம் தடுப்புக்காவலில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் அவதூறான விடயங்கள் பரப்பப்பட்டமை,