திருகோணமலை முருகன் கோவிலடி பாலையூற்று கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டில் கீழ் உள்ள 15 பெண் தலைமை தாங்கும்குடும்பங்களுக்கு கழகத்தின் கனடா கிளையின் நிதி உதவியுடன் உலர் உணவுப் பொதிகள் சத்தி மாதர் சங்க தலைவி வசந்தி மற்றும் ஊடகவியலாளர் ஜதீந்திரா தலைமையில்
வவுனியா திருநாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் என தெரிவுசெய்யப்பட்ட 50 பேருக்கு லண்டனில் வசிக்கும் திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதியுதவியில் பால்மா பக்கற்றுகள் இன்று (15.12.2024) வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன் (க.சந்திரகுலசிங்கம்), தோழர்கள் கண்ணதாசன், சந்திரன், ரூமி ஆகியோர் கலந்து கொண்டு உதவியினை வழங்கிவைத்தனர்.
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பியோடிய சந்தேகநபர் திருகோணமலை – குச்சவௌியில் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலுக்கமைய இன்று(15) முன்னெடுக்கப்பட்ட சோதனையில் குச்சவௌி பல்லவக்குளம் காட்டுப்பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(15) இந்தியாவிற்கு பயணமானார். இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியா சென்றுள்ளார். ஜனாதிபதியின் முதலாவது வௌிநாட்டு விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் அனில் ஜயந்த உள்ளிட்டவர்களும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் லெப்டோபைரோசிஸ்(
14.12.1988இல் வவுனியாமருதங்குளத்தில் மரணித்த தோழர்கள் ஆச்சி (ஆறுமுகம்
அமரர் இராஜேஸ்வரி இராஜசேகரம் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு ஒருதொகுதி மக்களுக்கான உலருணவுப்பொதிகள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஊடாக வழங்கிவைக்கப்பட்டது. தோழர் முகுந்தன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும், கரைதுறைபற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கனகையா தவராசா அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா சமளம்குளம் பாடசாலையில் தோழர் ஆச்சி (ஆறுமுகம் சிவபாலன்) அவர்களின் நினைவாக தோழர் சிம்சுபன் மற்றும் மைதிலி அவர்களின் ஒழுங்கமைப்பில் மாணவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (14.12.2024 ) நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மாணவர்களுக்கான புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்தியாவிடமிருந்து நன்கொடையாக கிடைக்கவுள்ள எஞ்சின்களை தூர ரயில் சேவைகளுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் எஞ்சின்களை பொருட்கள் கொண்டு செல்லும் ரயில்களுக்கும் பயன்படுத்த முடியுமென இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது திணைக்களத்திடமுள்ள அதிக எடைகொண்ட மற்றும் தூரப் பிரதேசங்களுக்கான ரயில்களில் குறைபாடுகள் உள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
சம்பூரில் இந்திய நிதி உதவியுடன் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை விரைவாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் திறன் 120 மெகாவோட் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். இந்திய எரிசக்தி அதிகார சபை மற்றும் மின்சார சபையின் ஒன்றிணைந்த வேலைத்திட்டமாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.