சபாநாயகர் பதவியை அசோக ரன்வல இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்யவுள்ளதாக பாராளுமன்றம் அறிவித்துள்ளது. தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பதவிப்பிரமாணத்தின் பின்னர் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். Read more
13.12.2006இல் மரணித்த தோழர் சேகர் (சீனித்தம்பி பேரின்பநாயகம்) அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்று..
சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக அசோக சப்புமல் ரன்வல இன்று(13) அறிக்கை மூலம் அறிவித்தார். தனது கல்வித் தகைமை குறித்து சமூகத்தில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தாம் ஒரு போதும் தமது கல்வித் தகைமைகள் தொடர்பாக தவறான தகவல்களை வழங்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். தமக்கு ஜப்பான் வசீதா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய ஆய்வு நிறுவனமொன்று கலாநிதி பட்டம் வழங்கியதாகவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
தென் கொரியா – இலங்கை இடையிலான நீண்டகால உறவு பேணப்பட்டு இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தென் கொரியா ஆதரவளிக்கும் என இலங்கைக்கான தென் கொரியத் தூதுவர் மியோன் லீ தெரிவித்துள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல்ல – தென்கொரிய தூதுவர் இடையே பாராளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
11.12.1985ல் அரியாலையில் சுட்டுக் கொல்லப்பட்ட அமரர் தோழர் ரவிமூர்த்தி – கொக்குவில்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…..
11/12/1984ல் சுழிபுரம் பறாளாயில் இராணுவத்துடனான மோதலில் வீரமரணமடைந்த அமரர் தோழர் ரங்கா (சரவணமுத்து ஜெயமனோகரன்- மாதகல்) அவர்களின 40 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…
நீண்ட தூர சேவையில் ஈடுபடும் ரயில்களில் முன்பதிவு செய்து பயணச்சீட்டை கொள்வனவு செய்வதிலும் மோசடி இடம்பெற்றுள்ளது. இது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதானி நிறுவனம் இலங்கையில் நிர்மாணிக்கவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் அமைச்சரவையில் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையிலே அமைச்சரவையில் விடயங்கள் முன்வைக்கப்படவுள்ளன. இந்த குழு பல்வேறு துறைகள் ஊடாக ஆய்வுகளை மேற்கொண்டு காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பான பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
10.12.1999இல் மன்னாரில் மரணித்த தோழர் டேவிட் (மரிசால் அந்தோனி – உயிர்த்தராசன்குளம்) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….