வடக்கில் சில துறைகளில் காணப்படும் ஆளணிக் குறைபாடு தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. வடமாகாண அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகளை அரசியல் அதிகாரத்தின் தலையீடு இன்றி தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும்இ அரச சேவையை வடக்கில் மேலும் பலப்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார். Read more
கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். கிழக்கு மாகாண பிரதம செயலாளராக டீ. ஏ. சீ. என். தலங்கம மற்றும் வட மத்திய மாகாண பிரதம செயலாளராக ஜே.எம். ஜயசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்திக்காக அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தக் காணிகளுக்குப் பதிலாக கட்டாயமாக மாற்றுக் காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கடவுச் சீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கான அலுவலகம் அமைப்பது தொடர்பில் மாவட்டச் செயலாளருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வட மாகாண தொழில் கோரும் பட்டதாரிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்றைய தினம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் முதன்மைப் போராளிகளில் ஒருவருமான மாவை சேனாதிராசா அவர்களின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தனது இளவயதுக் காலம் முதல் இறுதி மூச்சுவரை, தமிழ் மக்களின் விடுதலை குறித்த அவரது எண்ணங்களையும் செயற்பாடுகளையும் நானும், நான் சார்ந்த அமைப்பு உறுப்பினர்களும் நன்கு அறிவோம்.
தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்தார். துறைமுகத்திலிருந்து முறையான சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் அரசியல்வாதிகள் பகிரங்கமாக குற்றச்சாட்டினர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் சபாநாயகருக்கு கிடைக்குமாயின் அது தொடர்பில் விவாதிக்கும் வகையில் இந்த முடிவு எடுத்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்திற்குரிய பலாத்காரத்தை பிரயோகித்தமை மற்றும் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்காக மூவரடங்கிய புதிய நீதிபதிகள் ஆயம் ஒன்றைப் பெயரிடுமாறு பிரதம நீதியரசரிடம் பரிந்துரைக்குமாறு, சட்டமா அதிபர் முன்வைத்த கோரிக்கை, கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆயத்தினால் நிராகரிக்கப்பட்டது.