Header image alt text

02.01.1982 இல் மரணித்த புளொட் அமைப்பின் ஸ்தாபகர்களுள் ஒருவரும்,’புதிய பாதை’ ஆசிரியரும், கழகத்தின் முதலாவது தளபதியுமான தோழர் சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி – சுழிபுரம்) அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
மார்க்சிச சிந்தனையாளரான தோழர் சுந்தரம் அவர்கள்
ஆரம்ப காலங்களில் காந்தீய அமைப்பின் செயற்பாடுகளில் அதிகூடிய பங்கினை வகித்து செயற்பட்டிருந்தார்.

Read more

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்றையதினம் (02) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. காத்மண்டு – பலுவட்டாரில் உள்ள நேபாள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, நேபாளம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Read more

இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பல் மாலி இராஜ்ஜியத்தில் இருந்து வருகை தந்துள்ளது. 1,185 பயணிகள் மற்றும் 750 பணிக்குழாமினருடன் குறித்த கப்பல் பிரவேசித்துள்ளது. நாட்டை வந்தடைந்தவர்கள் கொழும்பு, களனி ரஜமஹா விகாரை, பின்னவல யானைகள் சரணாலயம் ஆகியவற்றைப் பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர். Read more

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி மல்லாவி நகரில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் ஒன்று இன்று (02) முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது அமைப்பொன்றினால் குறித்த கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more

மக்களால் முன்வைக்கப்படும் கடிதங்களுக்கு உடனடியாக பதிலளிப்பதற்காகத் தொழில் அமைச்சினால் விசேட வட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 070 722 78 77 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களத்தில் மக்களால் முன்வைக்கப்படும் கடிதங்கள் தொடர்பில், உடனடியாக பதில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமையதிகாரி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவிடமிருந்து (ஓய்வு பெற்றவர்) நியமனக் கடிதத்தை இவர் நேற்று பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் வணிகசூரிய (ஓய்வு) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் அவரது அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.