முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய் பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார். Read more
அரசியல் நியமனம் பெற்ற 18 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் மீள அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைய வெளிநாட்டு சேவையை வினைத்திறன் மிக்க சேவையாக மாற்றும் நோக்கில் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவரான மகிந்த சமரசிங்க அந்த பதவியில் தொடர்ந்து பணியாற்றுவார் எனவும் அவர் கூறினார்.
இதுவரையில் கால தாமதம் ஆகியுள்ள 130,000 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார். வேரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய (ஓய்வு) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) இன்று (3) சந்தித்தார். கொழும்பில் உள்ள பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மேஜர் ஜெனரல் வணிகசூரிய (ஓய்வு) நேற்று முன்தினம் (1) தமது புதிய நியமனத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ஷ 2 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார். கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரச காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்றையதினம் (03) முன்னிலையாகுமாறு யோஷித்த ராஜபக்ஷவிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்குஇ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இப்பதவியை முன்னதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார வகித்திருந்தார்.