05.01.1996 ஆம் ஆண்டு வவுனியாவில் கொல்லப்பட்ட தோழர் அர்ச்சுணா (சிங்கராஜா நேசராஜா) அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
Posted by plotenewseditor on 5 January 2025
Posted in செய்திகள்
05.01.1996 ஆம் ஆண்டு வவுனியாவில் கொல்லப்பட்ட தோழர் அர்ச்சுணா (சிங்கராஜா நேசராஜா) அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
Posted by plotenewseditor on 5 January 2025
Posted in செய்திகள்
05.01.1988 ஆம் ஆண்டு கல்நாட்டினகுளத்தில் மரணித்த கழகத்தின் முன்னாள் தென்மராட்சி பொறுப்பாளர் தோழர் ரகு (கண்ணாடி ரகு – கொக்குவில்) அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 5 January 2025
Posted in செய்திகள்
வவுனியா திருநாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 34 பாடசாலைப் பிள்ளைகளுக்கு லண்டனில் வசிக்கும் திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதியுதவியில் இன்று (05.01.2025) கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன் (க.சந்திரகுலசிங்கம்), தோழர்கள் சந்திரன், ரூமி ஆகியோர் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.Posted by plotenewseditor on 5 January 2025
Posted in செய்திகள்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா – கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 5 January 2025
Posted in செய்திகள்
கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாகமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞர், கார் கதவு திறக்கப்படாமையால் அதிக நேரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவமானது வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 5 January 2025
Posted in செய்திகள்
கடற்றொழில் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும்போது, ஐரோப்பிய நாடுகளுடனும் அது தொடர்பில் கலந்துரையாடப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்துடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 5 January 2025
Posted in செய்திகள்
இலங்கையில் முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ள அதானி குழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்குக் குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக வலுசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 5 January 2025
Posted in செய்திகள்
மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் மெட்டாவுக்கு சொந்தமான முன்னணி செயலியான வாட்ஸ்அப், கூகுள் மூலம் வாட்ஸ்அப் இணையப் பயனர்களுக்காக reverse image search எனும் அம்சத்தை வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. reverse image search எனும் அம்சம், வாட்ஸ்அப் பயனர்கள் சந்தேகத்திற்குரிய புகைப்படத்தைச் சரிபார்ப்பதற்காக நேரடியாகக் கூகுளில் பதிவேற்றி சோதனை செய்ய அனுமதிக்கும் ஒரு முக்கிய அம்சமாகும். Read more