இலங்கையில் முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ள அதானி குழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்குக் குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக வலுசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.