கடற்றொழில் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும்போது, ஐரோப்பிய நாடுகளுடனும் அது தொடர்பில் கலந்துரையாடப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்துடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் வடக்கு மாகாண மீனவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.