07.01.2015இல் மரணித்த தோழர் வசந்தன் (சுந்தரலிங்கம் வசந்தலிங்கம் – கோவில்புதுக்குளம்) – வவுனியா இலங்கை போக்குவரத்துக் கழக (CTB) முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர்) அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 7 January 2025
Posted in செய்திகள்

விளக்கமறியறில் வைக்கப்பட்டிருந்த 12 ரோஹிங்கியா ஏதிலிகளும் இன்றைய தினம் (07) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்டனர். குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் குறித்த ஏதிலிகள் 12 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறையினரால் மீளப்பெறப்பட்ட நிலையில், அவர்கள் விடுவிக்கப்பட்டு ஏனைய ஏதிலிகளுடன் தங்க வைப்பதற்காக முல்லைத்தீவு இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
Posted by plotenewseditor on 7 January 2025
Posted in செய்திகள்
சீனாவுடன் தொடர்புடைய 5 யோசனைகளுக்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை அரசு ‘ஒரே சீனா’ கொள்கையைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடிப்பது தொடர்பில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, சீன மக்கள் குடியரசை மாத்திரம் சட்டரீதியான சீனாவாக ஏற்றுக் கொள்வதற்கும் தாய்வான் சீனாவின் ஒரு மாநிலம் மாத்திரமே என ஏற்றுக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 7 January 2025
Posted in செய்திகள்
நாட்டின் இராஜதந்திர சேவைகளை முன்னெடுக்கும் வகையில் புதிதாக 5 இராஜதந்திரிகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உத்தியோகப்பூர்வ நியமனக் கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 7 January 2025
Posted in செய்திகள்
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரை 747 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கைதாகியுள்ளவர்களில் 100 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் 41 வழக்குகளும் உயர்நீதிமன்றில் 14 வழக்குகளும் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 7 January 2025
Posted in செய்திகள்
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களைத் தாமதமின்றி பெற்றுக் கொள்ளும் வகையில் வெளிவிவகார அமைச்சினால் டிஜிட்டல் வசதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 7 தூதரகங்கள் ஊடாக இந்த முன்னோடி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more