நாட்டின் இராஜதந்திர சேவைகளை முன்னெடுக்கும் வகையில் புதிதாக 5 இராஜதந்திரிகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உத்தியோகப்பூர்வ நியமனக் கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கட்டாருக்கான தூதுவராக ஆர்.எஸ்.கான் அசாத்தும் ரஷ்யாவுக்கான தூதுவராக எஸ்.கே.குணசேகரவும், குவைத்துக்கான தூதுவராக எல்.பி.ரத்நாயக்கவும் எகிப்துக்கான தூதுவராக ஏ.எஸ்.கே.செனவிரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நியூசிலாந்துக்கான உயர்ஸ்தானிகராக டபிள்யூ.ஜீ.எஸ். பிரசன்ன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.