Header image alt text

வில்பத்து தேசியப் பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி வகை டொல்பின் மீன்கள் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் (7) மீட்கப்பட்டன. முள்ளிக்குளம் பாதுகாப்புத் தரப்பினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதிக்குச் சென்ற வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் பரிசோதனை நடத்தினர். Read more

தங்களது கோரிக்கைக்கு நியாயமான தீர்வு மூன்று நாட்களுக்குள் கிடைக்காவிடின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. பதவி உயர்வு, வேதன அதிகரிப்பு மற்றும் சேவையை நிரந்தரமாக்கல் போன்ற கோரிக்கைக்குரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என அந்த கூட்டமைப்பு கோரியுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அந்த கூட்டமைப்பு இன்று முற்பகல் கல்வி அமைச்சிற்குச் சென்றிருந்தது. Read more

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதித்து கோட்டை பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என காவல்துறையினர் கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்தனர். Read more

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் முக்கிய கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்றை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்புக்கான ஏற்பாடு தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். Read more

நாட்டில் சமீப காலமாக சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஆஸ்துமா மற்றும் காசநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவாச நோய் நிபுணர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். Read more

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்த ஆண்டு இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஜயத்திற்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைத்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்துக்கான திகதியைத் தீர்மானிக்கும் பணிகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். Read more