09.01.1991 ஆம் ஆண்டு மரணித்த தோழர் சிறி (கணேசன் சிறிகணேசபுனிதன் – யாழ்ப்பாணம்) அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
Posted by plotenewseditor on 9 January 2025
Posted in செய்திகள்
09.01.1991 ஆம் ஆண்டு மரணித்த தோழர் சிறி (கணேசன் சிறிகணேசபுனிதன் – யாழ்ப்பாணம்) அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
Posted by plotenewseditor on 9 January 2025
Posted in செய்திகள்
இலங்கையில் தஞ்சமடைந்த ரோஹிங்கியா ஏதிலிகளை நாடுகடத்த வேண்டாம் என வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாதைகளைத் தாங்கியவாறு அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ரோஹிங்கியா ஏதிலிகளை நாடு கடத்த வேண்டாம் எனவும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Posted by plotenewseditor on 9 January 2025
Posted in செய்திகள்
திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி டபிள்யு. ஜி. எம். ஹேமந்த குமார இன்று (09) மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். 2003.09.02 ஆம் திகதி இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட இவர் தெஹியத்தகண்டிய உதவி பிரதேச செயலாளர், Read more
Posted by plotenewseditor on 9 January 2025
Posted in செய்திகள்
இஸ்லாம் மதத்தை அவமதித்ததற்காக ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (9) நிராகரித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 9 January 2025
Posted in செய்திகள்
இந்த வருடத்துக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் பிரதமர் ஹரினி அமரசூரியவினால் நாடாளுமன்றில் இன்று முன்வைக்கப்பட்டது. இதன்படி, இந்த வருடத்துக்கான அரச செலவீனம் 4 ஆயிரத்து 218 பில்லியன், 248 மில்லியன் 18 ஆயிரம் ரூபாவாகும். ஒதுக்கீட்டு சட்டமூலத்துக்கு அமைய, ஜனாதிபதி செயல்முறை திட்டத்தின் மீண்டுவரும் செலவீனம் 2 ஆயிரத்து 518 மில்லியன் ரூபாவாகும். அத்துடன் மூலதனச் செலவீனம் 354 மில்லியன் ரூபாவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 9 January 2025
Posted in செய்திகள்
இரண்டு புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தனர். சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர். பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.