கந்தளாயைப் பிறப்பிடமாகவும், 24/27A, சகாயமாதாவீதி, அன்புவழிபுரம், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டவரும், தோழர் வக்கீல் (ஜெகமோகன்) அவர்களின் அன்புத் தந்தையுமான திரு. சின்னத்தம்பி சித்திரவேல் அவர்கள் இன்று (12.01.2025) காலமானார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)