உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நால்வர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று(12) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. அதற்கமைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பீ அபேகோன் மற்றும் M.S.K.B.விஜேரத்ன ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.