உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவிற்குப் பயணமாகியுள்ள நிலையில் 5 அமைச்சுகளுக்குப் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களான டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய 3 அமைச்சுக்களுக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு என்பவற்றுக்குப் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more
மாகாண மட்டத்தில் குற்ற விசாரணை பிரிவுகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தற்போது காணப்படும் பொலிஸ் நிலையங்களுக்கு மேலதிகமாக இந்த பிரிவுகளை நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். தற்போது தென் மாகாணத்தில் இத்தகைய பிரிவு செயற்பட்டுவருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கம்பளை, தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடத்தப்பட்ட மாணவியுடன் அம்பாறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் பாதுகாப்பிலிருக்கும் மாணவியிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ள நிலையில், அவரை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.