இரத்தினக் கற்களை உள்ளாடைகளில் மறைத்து வைத்துச் சீனாவுக்குக் கொண்டு செல்ல முயன்ற சீனாவைச் சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகச் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு (13) கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் சுங்க அதிகாரிகளால்இ சீனப் பிரஜைகளான தந்தையும் மகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபரான 45 வயது தந்தையும் அவரது 21 வயது மகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை தெரிய வந்துள்ளது.

இவர்கள் இருவருடமிருந்தும் சுமார் 17,450,875 ரூபாய் மதிப்புள்ள இரத்தினக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் நேற்று இரவு 07.30 மணியளவில் சீனாவின் சோங்கிங் நோக்கிப் புறப்பட்ட, சோங்கிங் எயார்லைன்ஸ் OC-2394 என்ற விமானத்தில் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவேளை கைது செய்யப்பட்டுள்ளனர்.