இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் 2 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இன்று(16) கைச்சாத்திடப்பட்டுள்ளன. மலையகப் பகுதிகளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு 60 Smart வகுப்பறைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயஸ்ர்தானிகர் சந்தோஷ் ஜா பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். Read more
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், நீண்ட காலமாக மன்னாரில் இடம்பெற்று வரும் கொலை சம்பவங்களின் தொடர்ச்சியாகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாட்டுவண்டி போட்டி தொடர்பில் மன்னாரில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு இடையே நிலவும் முறுகல் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்தனர்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சீனாவிற்கான 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாள் இன்றாகும். ஜனாதிபதி சீனாவின் அரச, தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதலீட்டு அமர்வில் இன்று(16) முற்பகல் கலந்து கொண்டார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இந்த அமர்வு இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். சீனா டியான்யிங் இன்கோபரேசன் (CNTY- China Tianying Inc),