17.01.1988இல் வவுனியாவில் மரணித்த தோழர் பஞ்சாப் (பாலன் – புதுக்குளம்) அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 17 January 2025
Posted in செய்திகள்
17.01.1988இல் வவுனியாவில் மரணித்த தோழர் பஞ்சாப் (பாலன் – புதுக்குளம்) அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 17 January 2025
Posted in செய்திகள்
அயல்வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று(17) பிணையில் விடுவிக்கப்பட்டார். நுகேகொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேகநபர் 10,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் 2 சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டார்.
Posted by plotenewseditor on 17 January 2025
Posted in செய்திகள்
சீனாவிற்கான 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி இன்றிரவு(17) நாடு திரும்பியுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, சீன ஜனாதிபதி, சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் Wang Xiaohui உள்ளிட்டவர்களை சந்தித்திருந்தார். சீன ஜனாதிபதியின் அழைப்பிற்கிணங்க இந்த விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Posted by plotenewseditor on 17 January 2025
Posted in செய்திகள்
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் பலர் தங்கியிருந்த அறுகம்பை சுற்றுலாத் தலத்தை இலக்கு வைத்து, சிறைச்சாலைக்குள் இருந்து பாரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக பயங்கரவாத புலனாய்வுப்பிரிவு இன்று(17) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அது தொடர்பிலான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 17 January 2025
Posted in செய்திகள்
பின்லாந்தில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திசர நாணாயக்காரவிற்கு கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று(17) பிணை வழங்கியுள்ளது. இன்று முற்பகல் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்காரவின் சகோதரரான திசர நாணாயக்கார கடந்த 28ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். Read more