Header image alt text

புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு தேவையான நிதி மற்றும் ஏனைய வசதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தற்போது சுமார் 75,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் போக்குவரத்து கட்டுப்பாடு, குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு என்பனவற்றுக்காக கடமையாற்ற வேண்டுமென பொலிஸார் தெரிவித்தனர். Read more

மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். உந்துருளியில் பிரவேசித்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக, அவர்களைப் போலவே வரையப்பட்ட இரண்டு படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். Read more

கடந்த பொதுத் தேர்தலில் தேர்தல் செலவறிக்கையை சமர்ப்பிக்காத 74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்தலில் போட்டியிட்டுத் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 800 வேட்பாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.